India
பீகாரில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை தொடங்கிய பா.ஜ.க கூட்டணி : புல்டோசர் கொண்டு வீடுகள் இடிப்பு!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் பீகாரில் பா.ஜ.க கூட்டணி ஆட்சியை மீண்டும் பிடித்துள்ளது. இந்த கூட்டணி ஆட்சியில் நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். ஆனால் பல முக்கிய அமைச்சர் பதவிகளை பா.ஜ.கவினர் கைப்பற்றியுள்ளனர். அதிலும் குறிப்பாக உள்துறை பொறுப்பை பா.ஜ.க பெற்றுள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் நடக்கும் புல்டோசர் தாக்குதலை பீகாரில் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள் துவங்கியுள்ளது பா.ஜ.க கூட்டணி.
சமஸ்திபூர் மாவட்டத்தில் சட்ட விரோத ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இஸ்லாமியர்கள் மற்றும் ஏழைகளின் வீடுகளையும் கடைகளையும் புல்டோசர்கள் மூலம் அகற்றப்பட்டுள்ளது. அதேபோல் லக்கிசராய் நகரிலும் குடிசை வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வீடுகளை இழந்த இஸ்லாமியர்களும் மக்களும் பா.ஜ.க கூட்டணி அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இவர்களை காவல்துறை கொண்டு அம்மாநில அரசு ஒடிக்கி வருகிறது.
Also Read
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
-
வா.. வா.. வருங்காலமே.. வா : வரலாறு படைக்க இளம் தலைவர் வருகிறார் பாடல் வெளியீடு!