India
மகளிருக்கு ரூ.1000 : திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றும் கேரளம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், இலவச பேருந்து பயணம் என மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் மகளிருக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், பெண்கள் வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தை 2023 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு மாதமும் சுமார் ஒரு கோடியே 14 இலட்சம் மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 26 மாதங்களா கிட்டத்தட்ட ஒரு கோடியே 14 இலட்சம் மகளிர் ஒவ்வொருவருக்கும் சுமார் ரூ. 26 ஆயிரம் உரிமைத் தொகையை அரசு வழங்கியுள்ளது.
இந்த நிலையில், திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றி கேரள மாநிலத்திலும் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என என கேரள அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அரசின் எந்தவித நலத்திட்ட நிதி உதவியும் பெறாத 35 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 33 லட்சம் பெண்களுக்கு ‘மகளிர் பாதுகாப்பு திட்டத்தில்’ மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.3800 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும்ஒன்றிய அரசு விதித்த நிதிக் கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், பொருளாதார நெருக்கடிகளிலிருந்து கேரள மக்களின் நலன்களைப் பாதுகாக்க இடது ஜனநாயக முன்னணி அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
SIR விவகாரம் : பொது விவாதத்தில் நாராச பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யனுக்கு குவியும் கண்டனம் - விவரம்!
-
பசும்பொன்னில் தேவர் திருமகனார் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
”விடுதலைக்குப் போராடிய தீரர்” : முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
-
தமிழ்நாட்டின் கடல்சார் வர்த்தகத்தை உலகளவில் மேம்படுத்தி வருகிறோம்! : மும்பையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"டீசல் பேருந்துகளின் பயன்பாடு குறைக்கப்படாது" : அமைச்சர் சிவசங்கர் உறுதி!