India

திருட்டு வதந்தி : பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் அடித்து கொலை - உ.பி-யில் அதிர்ச்சி!

பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இதை தடுக்க அம்மாநில அரசுகள் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்து வருகிறது.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், ஃபதேபூர் மாவட்டத்திற்குட்பட்ட தாராவதி காபூர்வா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரியோம் பால்மிகி. இவர் கடந்த 2 ஆம் தேதி வங்கி ஒன்றில் தூய்மை பணியாளராக பணிபுரியும் தனது மனைவியை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது, கும்பல் ஒன்று இவரை தடுத்துள்ளது. அப்பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது. மேலும் ட்ரோன்களை கொண்டு திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதாக மக்கள் மத்தியில் வதந்தி இருந்துள்ளது.

இதனால், ஹரியோம் பால்மிகியை தடுத்த கும்பல் அவரிடம் கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு அவர் சரியாக பதில் சொல்லாதால், இவர்தான் அந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வரும் நபர் என நம்பி ஹரியோம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

இரவு முழுவதும் நிர்வாணமாக்கி அவரை கட்டி வைத்து அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதில் உயிரிழந்த அவரது உடலை ஈஷ்வர்தாஸ்பூர் ரயில்வே நிறுத்தம் அருகே ரயில் தண்டவாளத்தில் வீசியுள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: அண்ணாமலை பெயரை சொல்லி பணம் கேட்டு மிரட்டல் : பா.ஜ.க நிர்வாகிகள் 3 பேர் கைது!