India
பஞ்சாப் மழை வெள்ளம்! : 3.87 லட்சம் பேர் பாதிப்பு - உயிரிழப்பு 51ஆக உயர்வு!
இந்தியாவிலேயே கோதுமை உற்பத்தியில் முதன்மை மாநிலமாக விளங்கும் பஞ்சாப்பில், எதிர்பாராத வகையில் கொட்டி தீர்த்த அதிகனமழையால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மழை வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன சிலரை தேடுகிற பணியும், பாதிப்பிற்குள்ளான லட்சக்கணக்கான மக்களை மீட்டு, அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தின் 15 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 3.87 லட்சம் மக்கள், இம்மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக, அப்பகுதிகளில் 1.84 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன.
சுமார் 2,064 கிராமப்பகுதிகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்ததால், கடந்த சில நாட்களாக சுமார் 20,000 அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. இந்நிலையில், மழைநீர் வடிந்த இடங்களில் உள்ள சில பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
வெள்ள பாதிப்பிற்குள்ளாகிய பஞ்சாப் மாநிலத்திற்கான நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தப்பட்டதையடுத்து இன்று (செப். 9) பஞ்சாப் வெள்ள சேதங்களை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி.
Also Read
-
மக்களின் உயிரைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்குமா தவெக? : கனிமொழி கேள்வி!
-
ஞானேஷ் குமார் 48 மணிநேரத்திற்குள் பதவி விலக வேண்டும்! : அபிஜித் திப்கே எச்சரிக்கை!
-
நேற்று விஜய் அறிவுறுத்தல்.. ஆனா இன்று.. ஒரே நாளில் தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் அடுத்தடுத்து மின்வெட்டு!
-
தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் சட்டென Power Cut... TENSION ஆன செங்கோட்டையன்!
-
BoyFriend உடன் சேர்ந்து Blackmail.. மிரட்டி பணம் பறிப்பு.. தவெக பிரமுகர், BIGG BOSS வர்ஷினி வெங்கட் கைது!