India
”தேர்தல் ஆணையத்தின் நோக்கம் ஆபத்தானது” : பொருளாதார மேதை அமர்த்தியா சென் கருத்து!
பொதுமக்களின் வாக்குரிமையை நசுக்குவது என்பது தேர்தல் ஆணையத்தின் நோக்கம் எனில் அது மிகவும் ஆபத்தானது என்று பொருளாதார நிபுணர் அமிர்தியா சென் ஆங்கிலம் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது பேட்டி வருமாறு:–
கேள்வி : நாடு முழுவதும் நடக்கும் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
பதில் :இந்திய தேர்தல் ஆணையம் இதை முறை யாகச் செய்தால் அதைப் பற்றி ஏன் கேள்வி எழப்போகிறது? அவசர அவசரமாக பிழைகளை நீக்க முயற்சி செய்தால் மேலும் பிழைகளே ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும் அதன் விளைவு மோசமாக இருக்கும். தேர்தல் ஆணையத்தின் முயற்சியின் நோக்கம் விமர்சிக்கத் தக்கதாக மாறி உள்ளது. அதன் நடுநிலைமை குறித்து பலத்த கேள்விகள் எழுந்துள்ளன. பாரபட்சமற்ற முறையில் நடந்து கொள்ளும் தேர்தல் ஆணையத்தின் தீவிர முயற்சிகளில் கூட கடுமையான பிழைகள் இந்த நிலையில் வர்க்கச் சார்பு உடைய தேர்தல் ஆணையத்தின் நோக்கம் ஆபத்து நிறைந்தது.
கேள்வி :தேர்தல் ஆணையத்தின் அவசர மான செயல்பாட்டினால் பெரும் பாலான மக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் அபாயம் உள்ளதா?
பதில் :தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கான காரணத்தை உருவாக்கக் கூடாது உச்ச நீதிமன்றம் தனது பார்வை அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்தியது தேர்தல் ஆணையத்தை கண்காணிக்க வேண்டும் என்பது மிகவும் முக்கி யம். மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் இறுதிப் பொறுப்பு உச்சநீதிமன்றத்திற்கு உண்டு. அரசியல் அமைப்பின் உறுதிப் பாட்டையும் உத்தரவாதப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் நாளைய எதிர்காலம் குறித்த நம்பிக்கையும் நாம் அப்போது தான் தக்க வைக்கமுடியும்.
கேள்வி :பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஏழை மற்றும் புலம்பெயர்ந்த மேற்குவங்க மாநிலத்தின் தொழிலாளர்களுக்கு எதிராக நடத்தப்படும் அட்டூழியங்கள் பற்றி தங்கள் கருத்து என்ன?
பதில் :இந்தியா அனைத்து மாநிலங்களின் குடி மக்களுக்கு சொந்தமான ஒரு நாடு.வங்காளி, மகாராஷ்டிரர், தமிழர்கள் யாராக இருந்தாலும் சரி நாட்டின் எந்தப் பகுதியிலும் அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படக்கூடாது.
பேரழிவை ஏற்படுத்தும் அதிகாரிகளின் அறியாமை
மேற்குவங்க தொழிலாளர்களை பாரபட்சமாக நடத்துவது மிக மோசமானது. வேறு எந்த மாநிலத்தின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் பாகுபாடு நடத்துவதும் அப்படித்தான். இதில் கவலை என்னவென்றால் இந்தியர்களில் பல பிரிவினரை வங்க தேசத்திலிருந்து குடியேறியவர்கள் போல சித்தரிக்கும் போக்கு துரதிஷ்டவசமானது. கூடுதலாக இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வும் அதற்கு தூபம் போடும் போது அவர்கள் மேலும் பாதிக்கப்படுகின்றனர். பத்தாவது மற்றும் 11 ஆம் ஆண்டு பிறந்த வங்க மொழியை குறிப்பாக தில்லியில் உள்ள சில அதிகாரிகள், வங்க தேசத்தின் மொழியாகப் பார்க்கும் பொழுது அவர்களின் அறியாமையும் குழப்பமும் பேரழிவை ஏற்படுத்துகிறது.
கேள்வி :அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநில தேர்தலுக்கு தயாராகும் வகையில் மேற்கு வங்கத்தில் இந்துத்து வாவை ஊக்குவிக்கும் பாஜக கடுமையாக உழைத்து வருகிறது தெரிகிறது, அவர்கள் வெற்றி பெறுவார்களா?
பதில் :இந்து-முஸ்லிம் நல்லுறவு என்பது மேற்கு வங்கத்தின் பெருமைமிகு பாரம்பரியங்களில் ஒன்று. மிக நீண்ட நெடிய வர லாறு படைத்தது. வகுப்புவாத அடிப்படையில் குறுகிய மனப்பான்மையை உருவாக்கி அந்த நல்லுறவை சீர்குலைக்க நினைக்கும் அரசியல் திட்டங்கள் நிறைவேறாது. குறுகிய பலனைப் பெறலாம். ஆனால் அந்த மாநிலத்தை வகுப்புவாத வெறுப்பின் கோட்டையாக மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. அம்மாநில சமூகக் கட்டமைப்பும் கலாச்சாரப் பிணைப்புகளும் ஆழமாக வேரூன்றியது. தூண்டி விடப்படும் பிரிவினை வாதத்திற்கு எதிராக அந்த மாநிலத்தின் மக்கள் ஒன்றுபட்டு நிற்பார்கள்.
இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.
Also Read
-
“தமிழ்நாட்டில் சாகர்மாலா திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்!” : அமைச்சர் எ.வ.வேலு கோரிக்கை மனு!
-
M.Ed மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்... அமைச்சர் அறிவிப்பு - முழு விவரம் உள்ளே !
-
திருப்பூர் மாவட்டத்திற்கு 7 புதிய அறிவிப்புகளை வெளிட்ட முதலமைச்சர் : முக்கிய அறிவிப்பு இதோ!
-
பொள்ளாச்சியில் பெருந்தலைவர் காமராசர் உள்ளிட்டோருக்கு திருவுருவச் சிலை! - நினைவு அரங்கம்! : முழு விவரம்!
-
திருப்பூரில் 61 புதிய திட்டப்பணிகள் திறப்பு! - ரூ.295.29 கோடியில் நலத்திட்ட உதவிகள்! : முழு விவரம் உள்ளே!