India
பா.ஜ.க ஆட்சியில் மதுபானத் தொழிலுக்கு தனி மாநாடு! : திடுக்கிடும் மது புழக்கம்!
உத்தரப் பிரதேசத்தில் மதுபானத் தொழிலுக்கு என தனியே ‘மெகா முதலீட்டு மாநாட்டை’ இன்று (ஜுலை 10) நடத்துகிறது பா.ஜ.க அரசு. இதில், ரூ.5,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பிற தொழில்களுடன் இணைந்து மதுபான தயாரிப்புக்கும் கடந்த ஆண்டுகளில் முதலீட்டு திட்டங்கள் கையெழுத்தாகின. அவற்றில் சில தற்போது செயல்பாட்டில் உள்ளன. இச்சூழலில், கலால் வரி வருமானத்தை அதிகரிக்க, மதுபானத் தொழிலுக்கு என தனி மாநாடு நடைபெறுகிறது.
இதுகுறித்து அம்மாநில கலால் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) நிதின் அகர்வால் கூறுகையில், “கடந்த ஆண்டுகளில் ‘இன்வெஸ்ட் உ.பி.’ திட்டம் மூலம் மாநிலத்தில் மதுபானம் அடிப்படையிலான தொழில்களில் ரூ.39,479.39 கோடி முதலீட்டுக்கான 142 திட்டங்கள் பெறப்பட்டன.
இதற்காக 135 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இவற்றில் 46 நிறுவனங்கள் ரூ.7,888.73 கோடியை முதலீடு செய்கின்றன. 19 நிறுவனங்கள் ரூ.2,339.6 கோடியை முதலீடு செய்து உற்பத்தியை தொடங்கியுள்ளன” என்றார்.
உ.பி பா.ஜ.க அரசின் கலால் கொள்கையின் கீழ், நடப்பு நிதியாண்டில் 3,171 உள்நாட்டு மதுபானக் கடைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், 3,392 பியர் கடைகள் மற்றும் 2,799 வெளிநாட்டு மதுபானக் கடைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் 2,791 உள்நாட்டு மதுபானக் கடைகளில் பியர் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2016-17-ம் ஆண்டில் கலால் துறை ரூ.14,273.33 கோடி வருவாய் ஈட் டியது. இது, 2024-25-ஆம் ஆண்டில் ரூ.52,573.07 கோடியாக அதிகரித்துள்ளது. உயிரி எரிபொருள் கொள்கையின் கீழ் உத்தரப் பிரதேசம் 182.6 கோடி லிட்டர் பவர் மது உற்பத்தி செய்து நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!