India

காதலியை கொன்று உடலை கால்வாயில் வீசி காதலன் : அரியானாவில் பகீர் சம்பவம்!

அரியானா மாடல் அழகி ஷீத்தல் சவுத்திரி என்பவர் ஒரு ஆல்பம் படப்பிடிப்பிற்காக பானிபட்டில் உள்ள அஹார் கிராமத்திற்கு சென்று இருந்தார். கடந்த சனிக்கிழமை இரவு அவரது காதலன் சுனில் அங்கு சென்றார். படப்பிடிப்பு முடிந்ததும் இருவரும் காரில் சென்று மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மாடல் அழகி ஷீத்தல் சவுத்திரியின் கழுத்தை காதலன் அறுத்து கால்வாயில் வீசி சென்றுள்ளார். இரண்டு நாட்கள் கழித்து கால்வாயில் கிடந்த உடலை போலீசார் மீட்டு விசாரணை செய்ததில் மாடல் அழகி ஷீத்தல் சவுத்திரி என்பது தெரியவந்தது.

இது குறித்து மாடல் அழகியின் காதலான சுனிலிடம் போலீசார் விசாரணை செய்ததில் ஷீத்தல் சவுத்திரியை அவர் கொலை செய்தது தெரியவந்தது. மாடல் அழகியான ஷீத்தலுக்கு திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் சுனிலும் திருமணம் செய்து, அவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.

ஆனால் முதல் திருமணத்தை மறைத்து, தன்னை திருமணம் செய்யும்படி ஷீத்தலை வற்புறுத்தியதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஷீத்தலை சரமாரியாக குத்திக்கொன்று, கழுத்தை அறுத்து கொலை செய்தாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சுனிலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Also Read: இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் புதிய தலைமை தளபதி கொல்லப்பட்டார்... இஸ்ரேல் அறிவிப்பு !