India
அகமதாபாத்தில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம் : 133 பேர் பலி - அதிர்ச்சி சம்பவம்!
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் AI171 லண்டனுக்கு நண்பகல் நேரத்தில் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, திடீரென குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.
அப்போது, வானுயரத்திற்கு தீப்பிழம்பு எழுந்தது. விபத்துக்குள்ளான விமானம் போயிங் நிறுவனத்தின் 787 டிரீம் லைனர் ரக விமானம் ஆகும். இந்த விபத்தைத் தொடர்ந்து மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதால், பல வீடுகளும் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இந்த விபத்தால் அப்பகுதி முழுவதுமே கரும்புகையாக காட்சியளிக்கிறது. மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை 133 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 18005691444 என்ற அவசர உதவி எண்ணை இந்திய விமானப்போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது. அதேபோல் விபத்துக்குள்ளான விமானத்தில் 53 இங்கிலாந்து பயணிகள் பயணித்த நிலையில் 020 7008 5000 என்ற அவசர உதவி எண்ணை இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
"மீட்புப் பணிகளில் உறுதுணையாக இருப்போம்" என்றும் இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் கடனாவைச் சேர்ந்த ஒரு பயணி, 7 போர்த்துகீசிய பயணிகள்,169 இந்தியர்கள் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Also Read
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!