India

“அமெரிக்காவின் தலையீடு குறித்து பிரதமர் மோடி பேசாதது ஏன்?” - ஒன்றிய அரசுக்கு, ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!

ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலால் தற்போதைய பதட்ட நிலை ஏற்பட்டது. இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இலக்குகளுக்கு எதிராக இந்தியா இராணுவ நடவடிக்கை எடுத்தது. அதேநேரத்தில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பொதுமக்கள் இன்னல்கள், அமைதி மற்றும் சொத்து  இழப்பு என பெரும் விலை கொடுத்தனர்.

பாகிஸ்தானும் தாக்குதலில் இறங்கிய நிலையில், பதட்டம் அதிகரித்தது. மூன்று நாட்கள் தீவிர தாக்குதல்கள் மற்றும் பதட்டமான சூழலுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் சனிக்கிழமையன்று இராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்வதாக ஒரு புரிதலை அறிவித்தன.

இந்த அறிவிப்பை முதலில் வெளியிட்டவர்  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவார்.  இரு நாடுகளுக்கும் இடையே “போர்நிறுத்தம்” என்று அவர் கூறினார். மேலும் அறிக்கைகளில், அமெரிக்க அதிகாரிகள், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டிவேன்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோர் இரு நாடுகளின் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த்தாகவும், அதுவே இந்த புரிதலை அடைய “உதவியதாகவும்” கூறினர்.

இந்நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாற்றுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு வாஷிங்டனில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் ஏற்படாமல் தாம் தடுத்து நிறுத்தியதாகவும், மோதலை நிறுத்தினால் இரு நாடுகளுடனும் அமெரிக்கா அதிக வர்த்தகம் மேற்கொள்ளும் என கூறியதை குறிப்பிட்டும் ஜெய்ராம் ரமேஷ் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், இந்தியா - பாகிஸ்தான் இடையே அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை பிரதமர் ஏற்றுக் கொண்டாரா? பாகிஸ்தானுடன் நடுநிலையான இடத்தில் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா ஒப்புக் கொண்டதா? வர்த்தக ரீதியிலான காரணங்களுக்காக சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதா? போன்ற கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளிக்கவில்லை என விமர்சித்துள்ளார். கூறியுள்ளார்.

வாகன உற்பத்தி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் இந்திய சந்தைகளை தங்களுக்கு திறக்க வேண்டுமென்ற அமெரிக்காவின் வற்புறுத்தலுக்கு இந்தியா இனி அடிபணியுமா? இந்த கேள்விகளுக்கு பிரதமர், அவரது புகழ்பாடுவோர், சமாளிப்போர் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Also Read: இது கல்விக் கொள்கையல்ல, காவிக் கொள்கை: “பாஜக கும்பலுக்கு உச்சநீதிமன்றத்தின் நெற்றியடி” - முரசொலி கருத்து!