India
கிரிக்கெட்டை உதாரணமாக காட்டி இந்தியாவின் வலிமையை விளக்கிய ராணுவ தளபதி... விவரம் உள்ளே !
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கடந்த மாதம் 22-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியதால் போர் பதற்றம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்தியா, பாகிஸ்தானின் ராவல்பிண்டி, கராச்சி, இஸ்லாமாபாத் போன்ற முக்கிய நகரங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் தரப்பில் சண்டை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அதனை ஏற்றுக்கொண்டு தாண்டுதல் நிறுத்தப்படுவதாக இந்திய ராணுவம் அறிவித்தது. பின்னர் இந்த போர் விவகாரம் குறித்து ராணுவ தளபதிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது ராணுவ தலைமை இயக்குநர் ராஜிவ் காய் கிரிக்கெட் போட்டியை உதாரணமாக கூறி அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் பேசுகையில், "1970களில் ஆஷஸ் தொடரின் போது, ஆஸ்திரேலியாவின் ஜெஃப் தாம்சன் மற்றும் டென்னிஸ் லில்லி ஆகிய இரண்டு பந்துவீச்சாளர்களும் இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையை தகர்த்து அதனை வீழ்த்தினர்.
இதன் காரணமாக ‘if Thommo don't get ya, then Lillee surely must' (ஜெஃப் தாம்சன் உங்களை வீழ்த்தவில்லை என்றால் டென்னிஸ் லில்லி உங்களை கட்டாயம் வீழ்த்துவார்) என்ற பழமொழியை ஆஸ்திரேலியர்கள் உருவாக்கினர். அதே போல இந்திய பாதுகாப்பு அடுக்குகளை சமாளித்து கடந்து சென்றாலும் அடுத்த பாதுகாப்பு அடுக்கு உங்களை ( பாகிஸ்தான் ) வீழ்த்தும்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !