India
திருமணம் நிச்சயத்தால் ஆத்திரம்.. இளம்பெண் மீது ஆசிட் வீசிய 4 குழந்தைகளின் தந்தை... உ.பி-யில் பயங்கரம்!
பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தின் கோசி கொத்வாலி என்ற பகுதியில் 25 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு வரும் மே 27-ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்த சூழலில் சம்பவத்தன்று அந்த பெண் வங்கிக்கு பணம் எடுக்க சென்றுள்ளார்.
வங்கியில் இருந்து பணம் எடுத்துவிட்டு வீட்டுக்கு திரும்பி சென்றுகொண்டிருந்த நேரத்தில் பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் அந்த பெண்ணின் மீது ஆசிட் வீசிவிட்டு சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் நிலை குலைந்துபோன அந்த பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டு நீண்ட நேரத்திற்கு பிறகு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து முகம், கழுத்து என பல பகுதிகளில் சுமார் 60% காயமுடன் சேர்க்கப்பட்ட அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மருத்துவமனை நிர்வாகம் போலீசுக்கு அளித்த தகவலின்பேரில் விரைந்து வந்த அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் தனக்கு நேர்ந்ததை வாக்குமூலமாக கொடுத்தார்.
மேலும் ஆசிட் வீசிய நபர்களில் ஒருவன், "நீ எனக்கு கிடைக்கவில்லை என்றால், வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது" என்று கூறி மிரட்டியதாக அந்த பெண் கூறினார். இதைத்தொடர்ந்து பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரிக்கையில் ராம் ஜனம் சிங் பட்டேல், மனோஜ் யாதவ், சுரேந்திர யாதவ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரிக்கையில், ராம் ஜனம் சிங் பட்டேல் என்பவரும் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இருவரும் பிரேக் அப் செய்த பிறகு, ராம் படேல் வேறொரு பெண்ணை திருமணம் செய்து தற்போது 4 குழந்தைகளுக்கு தகப்பன் ஆகியுள்ளார். இருப்பினும் அவர் தனது முன்னாள் காதலியை தொடர்ந்து காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் ஆனது தெரிந்ததும், ராம் ஜனம் படேல் அந்த பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசி சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கைது செய்யப்பட்ட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அப்பாவை வரவேற்கிறோம்...” - ஜெர்மனியில் முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்!
-
உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
-
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !