India

பாபா ராம்தேவ் தனி உலகத்தில் வாழ்கிறாரா? : மத வெறுப்பை தூண்டும் விளம்பரம் - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

பாஜக ஆதரவாளரான யோகா சாமியார் ராம்தேவ், பதஞ்சலி எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தை பாஜக மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் அதிகளவில் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு அலோபதி மருத்துவத்துக்கு எதிரான பல்வேறு பொய்யான விளம்பரங்களையும் பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டது. இதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததை அடுத்து இதுபோன்ற விளம்பரங்கள் இனி ஒளிபரப்பப்படாது என பாபா ராம்தேவ் மனிப்பு கேட்டார்.

தற்போது மீண்டும் மற்றொரு சர்ச்சையில் பாபா ராம்தேவ் சிக்கியுள்ளார். பதஞ்சலி நிறுவனத்தின் குளிர்பான விளம்பர வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் மதரீதியாக வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ் தனி உலகத்தில் வாழ்கிறாரா? என கேள்வி எழுப்பி, 24 மணி நேரத்தில் சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரித்துள்ளது. இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Also Read: பீகார் தேர்தலுக்காக வேடமிடுகிறதா ஒன்றிய பா.ஜ.க அரசு? : சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு எதிரொலி!