India

பாம்பு கடித்ததாக நாடகமாடிய மனைவி : கணவன் கொலையில் நடந்த பகீர் சம்பவம் - உ.பி-யில் அதிர்ச்சி!

உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியைச் சேர்ந்தவர் அமித். இவரது மனைவி ரவிதா. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த ஏப்.12 ஆம் தேதி வீட்டின் படுக்கை அறையில் அமித் இறந்த நிலையில் சடலமாக இருந்துள்ளார். அவரது உடல் அருகே உயிருடன் பாம்பு ஒன்று இருந்துள்ளது.இதனால் மனைவி கூச்சலிட்டுள்ளார்.

பிறகு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதற்கட்ட விசாரணையில், பாம்பு கடித்து இறந்ததாக மனைவி கூறியிருந்தார்.

பின்னர் மருத்துவமனையில் இருந்து வந்த உடற்கூறு ஆய்வு அறிக்கையை பார்த்து போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். அதில் பாம்பு கடிப்பதற்கு முன்பே அமித் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டதற்கான தடங்கள் இருப்பதாக, கூறப்பட்டு இருந்தது.

உடனே போலிஸார் மனைவியிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டர். இதில் கணவனை கொலை செய்து, பின்னர் பாம்பை கடிக்க விட்டதாக ஒப்புக்கொண்டார். ரவிதாவுக்கும் மற்றொரு நபருக்கும் ஓராண்டாக பழக்கம் இருந்துள்ளது. இதுபற்றி அறிந்த அமித் மனைவியை கண்டித்துள்ளார்.

இருந்தும் இவர்கள் பழகிவந்துள்ளனர். இதையடுத்து இவர்கள் இருவரும் சேர்ந்து அமித்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி அமித் தூங்கிக் கொண்டிருந்தபோது கழுத்து நெறித்து கொலை செய்துள்ளனர். பிறகு ரூ.1000-க்கு பாம்பு ஒன்றை வாங்கி வந்து அதை அமித் உடலில் கடிக்கவைத்து, பாம்பு கடித்ததாக நாடகமாடியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: மகனுக்கு பதில் தந்தை... காலுக்கு பதில் கை... பாஜக ஆளும் ராஜஸ்தான் மருத்துவர்கள் செயலால் அலறும் மக்கள்!