India
இந்தியாவிலேயே உச்சபட்ச பொருளாதார வளர்ச்சி : முதலமைச்சர் தலைமையில் முதலிடத்தை பிடித்த தமிழ்நாடு !
ஒன்றிய அரசு புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது, நடப்பு நிதியாண்டில் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023-24-ம் நிதியாண்டில் 15 லட்சத்து 71 ஆயிரத்து 368 கோடி ரூபாயாக இருந்த தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, 2024-25-ம் நிதியாண்டில் 17 லட்சத்து 23 ஆயித்து 698 கோடியாக அதிகரித்துள்ளது. அந்த வகையில், கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 புள்ளி ஆறு ஒன்பது சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு தமிழ்நாட்டின் அதிகபட்ச பொருளாதார வளர்ச்சி என்பது 2017-18-ம் நிதியாண்டில், 8 புள்ளி ஐந்து ஒன்பது சதவீதமாக அளவிலேயே இருந்தது.
அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பதவியேற்ற பின், ஒவ்வொரு நிதியாண்டிலும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி படிப்படியாக முன்னேறி வந்த நிலையில், தற்போதும் உச்சத்தை எட்டியுள்ளது.
இந்த வரிசையில் தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக ஆந்திரா, 8 புள்ளி இரண்டு ஒன்று சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் 2வது இடத்திலும், ராஜஸ்தான், அரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளன. இதில், குஜராத், பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வளர்ச்சி விகித தரவு, ஒன்றிய அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2032 - 33ம் நிதியாண்டில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாரத்தை தமிழ்நாடு எட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சாதனைக்கு மேலும் ஒரு மணிமகுடமாக அமையும் எனபொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!