India
போலிச் செய்திகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? : கனிமொழி என்.வி.என் சோமு MP கேள்வி!
நாட்டில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் விரிவான நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து ஒன்றிய அரசின் கவனத்திற்கு வந்திருப்பவை என்ன என திமுக மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் கனிமொழி சோமு கேள்வி எழுப்பினார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப தொழில்துறையை ஒழுங்குபடுத்துவதற்கான முக்கிய புள்ளிகள் மற்றும் காலக்கெடுவுடன் கூடிய அவசரச் சட்டம் அல்லது மசோதாவை அறிமுகப்படுத்த அரசு உடனடியாக முன் வர வேண்டும் மற்றும் மார்ச் 15, 2024 அன்று வெளியிடப்பட்ட ஆலோசனையின் கீழ் நிறுவனங்கள் மீது அரசாங்கம் ஏதேனும் கட்டுப்பாடு விதித்திருந்தால் அதன் விவரங்கள் என்ன? என அவர் கேட்டுள்ளார்.
அதேபோல் தனது இன்னொரு கேள்வியில் போலிச் செய்திகள் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்ன? என கேட்டுள்ளார்.
போலிச் செய்திகள் ஒரு பெரிய பிரச்சனையாக மாறி பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. போலிச் செய்திகள் பரவுவதற்கு அவற்றின் பங்களிப்பை அளவிட டிஜிட்டல் தகவல்களைப் பரப்பும் முக்கிய செயலிகள்/செய்தி நிறுவனங்கள் குறித்து ஆய்வுகள் அவசியம். தவறான செய்திகள் பரவுவதைத் தடுக்காத நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்க அரசாங்கம் திட்டமிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“தி.மு.க. செய்த சாதனை என்ன என்பதை மக்கள் சொல்வார்கள்!” : பிரதமர் மோடிக்கு முரசொலி தலையங்கம் பதிலடி!
-
பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை மற்றும் ஓய்வூதிய உயர்வு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!
-
5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள்…அனைத்து தரப்பினருக்குமானது திராவிட மாடல் ஆட்சி: துணை முதலமைச்சர் பேச்சு!