India
குஜராத் மாநிலத்தில் கொடூரம் : கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை!
குஜராத் மாநிலத்தில் சமூகவலைதளம் மூலம் கல்லூரி மாணவி ஒருவரிடம் இளைஞர் ஒருவர் நண்பராக பழகி வந்துள்ளார். பின்னாளில் அப்பெண்ணை நேரில் சந்தித்த அந்த இளைஞர், அவரை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்துள்ளார். இதை வைத்து மிரட்டி பல்வேறு இடங்களுக்கு அந்த கல்லூரி மாணவியை வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன், தனது நண்பர்களுக்கும் அவரை இரையாக்கியுள்ளார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அப்பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளது. இதுகுறித்து அந்த பெண் காவல்துறையில் புகார் அளித்தார். இதன்பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள அவர்கள், விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை குற்றவாளிகளில் ஒருவரை கூட குஜராத் காவல்துறை கைது செய்யவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இதேபோன்று கடந்த வாரம் பா.ஜ.க., ஆளும் மற்றொரு மாநிலமான உத்தரப்பிரதேசத்தில், 14 வயது தலித் சிறுமி ஒருவர் கொடுமைப்படுத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் உரிய நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை கைது செய்யாமல், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரிடம் பஞ்சாயத்து செய்ததும், நெருக்கடி கொடுத்ததும், மிரட்டல் கொடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !