India
”ரூ.150 கோடி லஞ்ச பேரம் - பா.ஜ.க தலைவர் விஜயேந்திராவை பாதுகாக்கும் மோடி” : சித்தராமையா குற்றச்சாட்டு!
”எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபோது அவரது மகன் விஜயேந்திரா, சிறுபான்மை ஆணையத் தலைவரிடம் ரூ.150 கோடி லஞ்ச பேரம் நடத்தியதாக எழுந்த புகார் மீது பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?" என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா,” எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபோது அவரது மகன் விஜயேந்திரர் வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்பு அறிக்கை குறித்து மௌனம் காக்க ரூ.150 கோடி பேரம் நடந்துள்ளது.
இந்த பிரச்சனையில் பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது சந்தேகங்களையும் பல கேள்விகளையும் எழுப்புகிறது. வக்ஃப் சொத்துக் கொள்ளையில் ஈடுபட்ட விஜயேந்திரா உள்ளிட்டோரை பாஜக தலைமை கேடயமாக வைத்திருப்பது ஏன்?
எடியூரப்பா மற்றும் பொம்மையின் கீழ் பா.ஜ.க ஏற்கனவே வக்ஃப் சொத்துக்கள் தொடர்பான பதிவு நோட்டீஸ்களை வெளியிட்டதில் பெயர் போனது. இப்போது, இந்த லஞ்சக் குற்றச்சாட்டுகள் மற்றும் கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் பாஜகவில் விஜயேந்திராவின் அதிகரித்து வரும் பங்கு, கர்நாடகா பாஜகவின் ஏடிஎம் ஆக மாறியுள்ளது” குற்றம்சாட்டியுள்ளார்.
Also Read
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!