India
”ரயில்வேதுறையை கைகழுவும் ஒன்றிய அரசு?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி MP குற்றச்சாட்டு!
மக்களவையில் இன்று ரயில்வே திருத்த மசோதா 2024 குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி MP பேசுகையில்,”வழக்கம்போல ஒன்றிய அரசு அனைத்து அதிகாரங்களையும் தனது கையில் எடுத்துக்கொண்டு, நாடாளுமன்றத்தில் மற்றவர்கள் என்ன செய்யவேண்டும் என கட்டளையிடுவதைபோலவே ரயில்வே திருத்த மசோதா 2024 விசயத்திலும் நடந்துகொள்கிறது.
நாட்டிலுள்ள மற்ற அனைத்து ரயில்வேகளைவிட தெற்கு ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட இரயில்களின் தரம் மிக மோசமானதாக இருக்கின்றது. உணவு மற்றும் கழிப்பறை வசதிகளின் தரம்கூட மிக மோசமானதாக இருக்கின்றன. இதை சுட்டிக்காட்டும்போது ஒன்றிய அரசு ரயில்வேதுறை தனியார்மயமாக்கலை முன்மொழிகிறது.
இப்படி ரயில்வேதுறையை ஒன்றிய அரசு கைகழுவுவது சரியல்ல. நாட்டின் பெரும்பான்மையான அடித்தட்டு மக்கள் இன்றும் தங்களின் முதன்மை போக்குவரத்தாக ரயில்களையே நம்பி இருக்கின்றனர். அதை கருத்தில்கொண்டு ரயில்வேதுறை தனியார்மயமாக்கும் எண்ணத்தை ஒன்றிய அரசு முற்றிலுமாக கைவிடவேண்டும்.
மேலும் எனது தொகுதியான தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி என்பது வணிகர்கள் அதிகமுள்ள நகரம். ஆனால் சென்னை-தூத்துக்குடி வழித்தடத்தில் நாளொன்றுக்கு ஒரு இரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. ரயில்வே அமைச்சகம் கூடுதல் இரயில்களை இவ்வழித்தடத்தில் இயக்கவேண்டும் உடனடியாக முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றும், சென்னை-தூத்துக்குடி வழித்தடத்தில் வந்தேபாரத் ரயில் ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
குழந்தைகளை வைத்து தவெக பிரச்சாரம் : அரசியல் உள்நோக்கம் கொண்டது - சென்னை ஐகோர்ட் அதிருப்தி கருத்து!
-
போதைப்பொருள் கடத்தவிட்டு வேடிக்கைப் பார்ப்பது தான் போதைப்பொருள் ஒழிப்பு லட்சணமா? : உதயநிதி கேள்வி!
-
மூடர் கூட்டத்தின் முதன்மை அமைச்சரே கேளும்.. : ஆதவ் அர்ஜூனாவுக்கு தி.மு.க பதிலடி!
-
“ஆம்னி பஸ்ஸில் 8 மடங்கு கொள்ளை ; மக்களின் காதுகளில் நாராசமாகதான் ஒலிக்கின்றன” : கே.என்.நேரு அறிக்கை!
-
தவெக நிர்வாகி வீட்டில் 135 KG போதைப்பொருள் பறிமுதல் - CM விஜயிக்கு தொடர்பு ?: எம்.எம்.அப்துல்லா கேள்வி!