India
வீடுபுகுந்து துப்பாக்கிச் சூடு - 2 பேர் பலி : டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!
வடகிழக்கு டெல்லிக்கு உட்பட்ட ஷாதாரா பகுதியில் நேற்று இரவு ஆகாஷ் ஷர்மா குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியே தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடி கொண்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த இருவர் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஆகாஷ் ஷர்மா மற்றும் அவரது மருமகன் ரிஷப் சர்மா ஆகியேர் உயிரிழந்தனர். மேலும் மகன் கரிஷ் ஷர்மா படுகாயம் அடைந்தார்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முற்கட்ட விசாரணையில், குற்றவாளிகளுக்கும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நிலம் தொடர்பான பிரச்சனை காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த கொலை சம்பவம் குறித்து போலிஸார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வீடுபுகுந்து 2 பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !