India
இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு உழைப்போம்! : இந்தியா கூட்டணி கட்சிகள் உறுதி!
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களும், கேரளாவின் வயநாடு உள்ளிட்ட தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும், நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு, மக்களாட்சி உரிமை பெற்ற ஜம்மு - காஷ்மீர் மக்கள், ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின் வழி பா.ஜ.க.வை புறக்கணித்து, இந்தியா கூட்டணி ஆட்சியை நிறுவியுள்ளனர்.
அரியானா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவின் போது பல்வேறு குழப்பங்கள் எழுந்த நிலையில், அது சார்ந்த விசாரணைகளை மேற்கொள்ள இந்தியா கூட்டணி வற்புறுத்தியுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறது இந்தியா கூட்டணி.
இந்தியா கூட்டணி சார்பில், நடைபெற இருக்கும் தேர்தல்களுக்கான தொகுதி பங்கீடுகள், சுமார் 99 விழுக்காடு நிறைவடைந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் நடவடிக்கைகள் அனைத்து இடங்களிலும் விறுவிறுப்பான நடைபெற்று வருகின்றன.
இதனிடையில், தேர்தல்களை சந்திக்கும் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ், சிவசேனா (தாக்கரே), ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், “இந்தியா கூட்டணியின் வெற்றியே, முதன்மை இலக்கு. ஒன்றிணைந்து போட்டியிட்டு மக்களாட்சி உரிமைகளை மீட்டெடுப்போம்” என தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து, இந்தியா கூட்டணியின் தலைவர்கள், இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரங்களை தீவிரமாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர்.
Also Read
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!