India
வாங்கிய சிகரெட்டுக்கு பணம் தரமறுத்து பெட்டிக்கடை ஊழியர் மீது தாக்குதல் : புதுச்சேரியில் அதிர்ச்சி!
புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்தவர் வசந்த். இவர் 100 அடி சாலையில் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு நேற்று இரவு மது போதையில் மூன்று இளைஞர்கள் வந்துள்ளனர். அப்போது, அவர்கள் சிகரெட் வாங்கியுள்ளனர். இதற்கு கடையில் இருந்த ஊழியர் சந்திரன் என்பவர் பணம் கேட்டுள்ளார்.
இதற்கு அந்த இளைஞர்கள் யாரிடம் பணம் கேட்கிறாய்? என கூறி சந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதை தடுத்த கடையின் உரிமையாளரையும் தாக்கிவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தற்போது, பெட்டிக்கடை ஊழியரை தாக்கிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து போலிஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து மது போதையில் தகராறு செய்த மூன்று இளைஞர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மாற்றம் எனச் சொல்லி.. அண்டப் புளுகை, ஆதவ் அர்ஜுனா புளுகாக மாற்றிவிட்டார்களோ?” : இ.பரந்தாமன் கண்டனம்!
-
ஒரே நாளில்... கோவையை தொடர்ந்து மதுரை.. கொலை நகரமாகும் தூங்கா நகரம்... வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!