India
குஜராத் : 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்ய முயன்ற தலைமையாசிரியர்... சிறுமி கத்தியதால் கொலை செய்த கொடூரம் !
குஜராத்தை சேர்ந்தவர் கோவிந்த் நாத். இவர் அங்குள்ள தஹோட் மாவட்டத்தில் உள்ள டோரனி என்ற கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பல ஆண்டுகளாக தலைமையாசிரியராக செயல்பட்டு வருகிறார். இவர் 6 வயது கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு காரில் வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்போது அந்த பகுதியில் உள்ள 6 வயது சிறுமியை தினசரி பள்ளிக்கு அழைத்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவ்வாறு காரில் சென்ற சிறுமி திரும்ப வீட்டுக்கு வரவில்லை.
அதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடி பின்னர் தலைமையாசிரியரிடம் இது குறித்து கேட்டுள்ளனர். அப்போது தான் சிறுமியை பள்ளியில் விட்டு சென்றதாகக் கூறியுள்ளார். இதனிடையே சிறுமியின் உடல் பள்ளிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை கடைசியாக பள்ளிக்கு அழைத்துவந்த பள்ளி தலைமையாசிரியர் கோவிந்த் நாத்திடம் நடைபெற்ற விசாரணையில், காரில் சிறிமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது அதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுமி உதவி கேட்டு கத்திய நிலையில், காரிலேயே சிறுமி மூச்சி விடமுடியாமல் செய்து அவரை கொலை செய்துள்ளார். பின்னர் யாரும் இல்லாத போது சிறுமியின் சடலத்தை பள்ளிக்கு அருகில் வீசியது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.
Also Read
-
மெட்ரோ விவகாரம் : பதிலே இல்லாமல் பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர்.. - சு.வெ எம்.பி. விமர்சனம்!
-
“முத்தமிழறிஞர் கலைஞருக்கு ’பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்” - தமிழச்சி தங்கப்பாண்டியன் MP வலியுறுத்தல்!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! : முழு விவரம் உள்ளே!
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!