India
சீதாராம் ஜெய்சூரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சுவாசக் கோளாறு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்று அவர் காலமானார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் சீதாராம் யெச்சூரியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சீதாராம் ஜெய்சூரியின் உடலுக்கு மலவர் வளையம் வைத்து அஞ்சி செலுத்தினார். அதேபோல் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்ட தி.மு.க எம்.பிகளும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து சீதாராம் ஜெய்சூரியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வுக்காகவும் கல்விக்காகவும் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.
Also Read
-
தமிழ்நாடு எதற்கெல்லாம் போராடும்... ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி !
-
கரூருக்கு முன்னர் நாமக்கல்லில் ஏற்பட்ட பெரிய அசம்பாவிதம்- கள அனுபவத்தை விவரிக்கும் பேரா.பெருமாள்முருகன்!
-
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நாடகம்.. தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள்.. குவிந்த கண்டனம்.. கேரள அமைச்சர் அதிரடி!
-
முதுபெரும் எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் மறைவு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
பதைபதைக்க வைக்கும் வீடியோ.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. விஜய் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது பாய்ந்த வழக்கு!