India
செவிலியரை வன்கொடுமை செய்ய முயற்சி... அந்தரங்க உறுப்பை பிளேடால் வெட்டி தப்பிய பெண் : பீகாரில் அதிர்ச்சி !
பீகார் மாநிலம் சமஸ்திபுர் மாவட்டத்தில் கங்காபூர் எனும் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் செவிலியர் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர், தனது பணிகளை முடித்துவிட்டு வழக்கம்போல வீடு திரும்புவததை சொல்வதற்காக மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர்களை சந்தித்துள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருந்த மூத்த மருத்துவர் சஞ்சய் குமார் மற்றும் அங்கிருந்த 3 பேர் மதுபோதையில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த அந்த செவிலியரை பிடித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளனர்.
இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அந்த செவிலியர் அங்கிருந்து தப்பிக்க முயற்ச்சித்துள்ளார். அப்போது மருத்துவமனையில் இருந்த பிளேடு ஒன்று செவிலியரின் கைகளுக்கு கிடைத்துள்ளது. அதனை கொண்டு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஒருவரின் அந்தரங்க உறுப்பை வெட்டியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பிய அந்த செவிலியர் தனக்கு நடந்த கொடுமை குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலிசார், மருத்துவர் சஞ்சய் குமார், அவதேஷ் குமார் மற்றும் சுனில் குமார் குப்தா ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
வடசென்னையில் ரூ.147 கோடியில் ‘முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்’ - திறந்து வைத்தார் முதலமைச்சர்..
-
கடுமையான போக்குவரத்து.. சிக்கி தவித்த ஆம்புலன்ஸ்.. கைக்குழந்தையுடன் களத்தில் இறங்கிய பெண் காவலர்! | VIDEO
-
தமிழ்த்தாய் தொடங்கி சொந்த தொகுதியை கூட விட்டுவைக்கவில்லை... ஏமாற்றிய அ.தி.மு.க - வறுத்தெடுத்த முரசொலி!
-
“திராவிட மாடல் ஆட்சியில் புதுப்பொலிவு பெற்ற 4000 திருக்கோயில்கள்” : அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!
-
“நான் ஏ.ஆர்.ரகுமானுடன் நிற்கிறேன்” : கனிமொழி எம்.பி ஆதரவு!