India
புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து பந்த்! : தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி அறிவிப்பு!
என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி செய்யும் புதுச்சேரியில் கடந்த மாதம் வீட்டு உபயோகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை உயர்த்தி அறிக்கை வெளியிட்டது புதுச்சேரி அரசு.
இந்த அறிவிப்பு வெளியானதும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக - காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் தலைமைச் செயலகத்தின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மின் கட்டண உயர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் முதலியார்பேட்டை பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவகத்தில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க.வின் மூத்த தலைவருமான இரா. சிவா, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா. சிவா, “புதுச்சேரியில் உயர்த்தபட்ட மின் கட்டணம் திரும்பபெறாத நிலையில் பொதுமக்கள் மிகுந்த அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் மின் கட்டண உயர்வை திரும்ப பெறாமல் மானியம் வழங்குவதாக கூறி மக்களை ஏமாற்றும் புதுச்சேரி அரசைக் கண்டித்து வரும் 18ம் நாள் மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்தை இந்தியா கூட்டணி சார்பில் நடத்த உள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
குடும்ப அரசியலைப் பற்றி பேச பா.ஜ.கவுக்கு தகுதியே இல்லை : வெளுத்து வாங்கிய முரசொலி!
-
SAAF தொடரில் பதக்கம் வென்று அசத்திய தமிழர்கள்.. ரூ.40.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி துணை முதல்வர் பாராட்டு!
-
பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிய செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!
-
தேர்தல் ஆணையத்தின் SIR... பாஜக, அதிமுக தவிர்த்த தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு !
-
"இந்த ஆண்டு 1 லட்சத்து 98 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது" - தஞ்சாவூர் ஆட்சியர் !