India
”எனக்கும் நீதி வேண்டும்” : ஆளுநர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் கூறிய பெண் கோரிக்கை!
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.நகர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து மேற்கு வங்க மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான மாநில அரசு, அபராஜிதா பெண் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மசோதாவை கடந்த 3-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இதன்படி, பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை 21 நாட்களில் போலீசார் முடிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் மரணமடைந்தால், குற்றவாளிக்கு தூக்கு தண்டன் விதிக்க வேண்டும் என்பன போன்ற சட்டப் பிரிவுகள் உள்ளன.
இந்த மசோதா ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆனந்த போஸ் மேற்குவங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதாவை குடியரசுத்தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், எனக்கும் நீதி வேண்டும் என மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் வைத்துள்ள பெண் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து பேசிய அப்பெண், “எனக்கும் நீதி வேண்டும். நான் ஒரு சாதாரண ஊழியர் என்பதால் மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீது இதுவரை விசாரணை எதுவும் நடைபெறாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. ஆனால் இன்று நிலைமை மாறி இருக்கிறது. இதனை வரவேற்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!