India
பெற்ற மகளை நடுரோட்டில் கோடாரியால் கொடூரமாக கொன்ற தந்தை... உ.பி-யில் அரங்கேறிய சோகத்தின் பின்னணி?
உத்தர பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள பஹ்ரைச் என்ற பகுதியில் நயீம் கான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து, 17 வயதில் குஷ்பு என்ற மகள் ஒருவர் உள்ளார். இந்த சூழலில் இவரது மகள், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் வீட்டுக்கு தெரிந்து, அவரது தந்தை கண்டித்ததாகவும், வேறொரு மாப்பிள்ளையை தேடி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழலில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இவரது மகளை காண, அவரது காதலன் வீட்டுக்கு வந்துள்ளார். இதனை கண்ட அவரது தந்தை அந்த இளைஞரை விரட்டியுள்ளார். ஆனால் அந்த இளைஞரோ தப்பியோடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நயீம் கான், தனது மகளை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் அருகில் இருந்த கோடாரியை எடுத்து அவரது கைகள், தலை, கால்களை என மொத்தமாக துண்டுதுண்டாக வெட்டி படுகொலை செய்தார்.
நடுரோட்டில் வைத்து மகளை கொடூரமாக கொலை செய்த தந்தை, மகளின் உடல் அருகே அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், உயிரிழந்த 17 வயது பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, தாய் அளித்த புகாரின் பேரில், தந்தை நயீம் கானை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கோர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“விஜயால் முருங்கைக்காய் மட்டும்தான் பறிக்க முடியும்” : ஆர்.எஸ்.பாரதி விளாசல்!
-
“குதிரைபேரத்தில் விஜய் A1 குற்றவாளி” : தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் பேட்டி!
-
நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள் நான்கு கேள்விகளுக்கு பதிலுண்டா? : விஜய்க்கு, தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
-
தங்க மோதிரம் என்ன விஜய் வீட்டு பணமா? : முரசொலி தலையங்கம் அடுக்கடுக்காக கேள்வி!
-
மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக.. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய செய்தி.. தவெக-வை ஓட்டால் விரட்டுங்கள்!