India
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அரசு அதிகாரி : ஆய்வுக்கு சென்றபோது நடந்த கொடூரம்... உ.பி-யில் அதிர்ச்சி!
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த கஜேந்திர சிங் (வயது 57) என்ற அரசு அதிகாரி வேளாண் மேம்பாட்டு துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் ஆய்வுக்காக பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் நிலையில், பலந்த்ஷாஹரி என்ற கிராமத்துக்கும் அவ்வாறு சென்றுள்ளார்.
அந்த கிராமத்தில் 6 வயது சிறுமி ஒருவர் தனியே வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அதனை கண்ட கஜேந்திர சிங் அந்த சிறுமியை மிரட்டி வீட்டுக்குள் அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவரின் வாயை பொத்தி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனை அங்கிருந்த சிறுவன் ஒருவர் பார்த்து ஊர் பெரியவர்களிடம் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் வருவதற்குள் கஜேந்திர சிங் அந்த கிராமத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் மீது கிராமமக்கள் அளித்த புகாரின் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்த கஜேந்திர சிங் தலைமறைவாகியுள்ளார். எனினும் தலைமறைவாக இருந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு அதிகாரி ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுமியின் குடும்பத்துக்கு உத்தரபிரதேச அரசு சார்பில் ரூ.8.25 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
தமிழ்நாடு முழுவதும் நவ.11 அன்று SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! : மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!
-
”இது முட்டாள்தனம்” : ஹரியானா வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற பிரேசில் மாடல் Reaction!
-
நலம் காக்கும் ஸ்டாலின்: அரசு நடத்தும் 10 சிறப்பு போட்டிகள்.. எப்போது? யார் யார் பங்கேற்கலாம்? - விவரம்!
-
KGF நடிகர் திடீர் மரணம் : சக நடிகர்கள் இரங்கல்!
-
”உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டே பதவி உயர்வு” : பதிவுத்துறை விளக்கம்!