India
மல்லிகார்ஜூன கார்கே மீது பாஜக MP அவதூறு பேச்சு : கை கட்டி வேடிக்கை பார்க்கும் ஜக்தீப் தன்கர்!
நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22 ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து ஜூலை 23 ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார் மல்லிகார்ஜூன கார்கே குறித்து பா.ஜ.க எம்.பி கன்ஷ்யாம் திவாரி அவதூறாக பேசினார். இதையடுத்து ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், கன்ஷ்யாம் திவாரி மன்னிப்பு கேட்கவேண்டும் என இந்தியா கூட்டணி எம்.பிக்கள் வலியுறுத்தினர். அப்போது மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், "அவர் மன்னிப்பு கேட்ட வேண்டிய அவசியம் இல்லை. சரியாகத்தான் பேசினார்” என கூறினார்.
இதனைத் தொடர்ந்து ஜக்தீப் தன்கரின் இந்த செலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளை பா.ஜ.க எம்.பிக்கள் அவதூறுக பேசிவருவது தொடர்ந்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சாதி குறித்து ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசினார். இந்த பேச்சை பிரதமர் மோடி பாராட்டினார்.தற்போது மல்லிகார்ஜூன கார்கே குறித்து பா.ஜ.க எம்.பி அவதூறாக மாநிலங்களவையில் பேசியுள்ளார்.
இருஅவைகளிலும் எதிர்க்கட்சிகளுக்கு உரிய சமமான மரியாதை வழங்கப்படுவதில்லை என்பது இதில் இருந்து தெளிவாக தெரிகிறது. மேலும் அவையை நேர்மையுடன் நடத்தக்கூடிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஆகிய ஆளும் கட்சிக்கு சாதகமாகவே செயல்பட்டு வருகின்றனர்.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!