India
மேற்குவங்கத்தில் கால்வாயில் வீசப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் : மர்ம நபர்கள் வன்முறை!
18 ஆவது மக்களவை தேர்தல் இன்றுடன் நிறைவடைகிறது. கடந்த ஏப்.19-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவுடன் தேர்தல் தொடங்கியது. பின்னர் அடுத்த அடுத்த கட்ட தேர்தல்கள் நடைபெற்றது. இன்று 7 ஆவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேற்குவங்க மாநிலத்தில், டம் டம், பராசத், பாசிர்ஹாட், ஜெய்நகர், மதுராபூர், டயமண்ட் ஹார்பர், ஜாதவ்பூர், கொல்கத்தா தக்ஷின் மற்றும் கொல்கத்தா ஆகிய 9 தொகுதிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜெய்நகர் நகர் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மர்ம நபர்கள் சிலர் வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்குப்பதிவு எந்திரங்களை அடித்து நொறுக்கிச் சூறையாடியுள்ளனர். பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்களை அருகே இருந்த கால்வாயில் வீசிச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் உடைந்த வாக்குப்பதிவு எந்திரங்களுக்குப் பதில் மாற்று வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு, வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்குவங்கத்தில் 9 தொகுதிகள் உட்பட உத்தர பிரதேசம் - 13, பஞ்சாப் - 13, பீகார் - 8, சண்டிகர் - 1, ஹிமாச்சல பிரதேசம் - 4, ஒடிசா - 6, ஜார்க்கண்ட் - 3 ஆகிய மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
Also Read
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!