India
10-ம் வகுப்பு வகுப்பில் 99.5 சதவீத மதிப்பெண் : ஆனால் எழுத படிக்க தெரியாது... அரசு வேலைக்காக இளைஞர் மோசடி!
கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபு லக்ஷ்மிகாந்த் லோகரே. 23 வயதான இவர் கொப்பல் நீதிமன்றத்தில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். தொடர்ந்து கடந்த ஏப்ரல் 22, 2024 அன்று 10ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில், பியூனாக பதவி உயர்வு பெற்றார்.
அதனைத் தொடர்ந்து நீதிபதி கேட்கும் ஆவணங்களை கொடுப்பதில் இவர் திணறி வந்துள்ளார். அதோடு, இவருக்கு எழுத படிக்க தெரியாமலும் இருந்துள்ளது. இதனை கவனித்த நீதிபதி பிரபுவின் மேல் சந்தேகம் அடைந்து அவரின் சான்றிதழை சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவரின்சான்றிதழில் 10-ம் வகுப்பு வகுப்பில் 99.5 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு கன்னடம், ஆங்கிலம்,இந்தி ஆகிய மொழிகளைப் படிக்கவோ எழுதவோ தெரியாது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதன் காரணமாக அவர் போலிசான்றிதழ் மூலம் அரசு வேலையில் சேர்ந்தாரா என்பது குறித்து போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு பிரவுவின் கையெழுத்தும் அவரது 10-ம் வகுப்பு விடைத்தாளில் உள்ள கையெழுத்தும் பொருந்துகிறதா என்பதை சரிபார்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Also Read
-
ஒன்றிய பா.ஜ.க அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது சென்சார் போர்டு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
அரசு சேவைகள் இனி மக்களின் விரல் நுனியில் : “நம்ம அரசு” whatsapp Chatbot சேவை தொடக்கம்!
-
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்நாட்டை கட்டமைக்கும் திராவிட மாடல்: UmagineTN- துணை முதலமைச்சர் உதயநிதி
-
ரூ.13.81 கோடியை விடுவிக்க வேண்டும் : ஒன்றிய அரசின் வாரிய கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் வலியுறுத்தல்!
-
நம்பி வாங்க.. சந்தோஷமா போங்க.. ரூ.4.5 கோடி மோசடி.. பதுங்கியிருந்த பாஜக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்!