India
”பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் பிரதமர் மோடி” : பிரியங்கா காந்தி விமர்சனம்!
18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் நான்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்னும் மூன்று கட்ட தேர்தல் உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதியில் போட்டியிடும் கிஷோரி லால் ஷர்மாவை ஆதரித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, " ஆட்சிக்காலத்தில் ஏழை எளியோரை,பிரதமர் மோடி சந்தித்தது உண்டா? வேலையில்லாத் திண்டாட்டம், விண்ணை முட்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை பத்து ஆண்டுகளில் செய்து விட்டதாக பொய் மூட்டைகளை மோடி அவிழ்த்து விடுகிறார்.
ஒரு சில பெரும் செல்வந்தர்களுக்கு மட்டுமே பிரதமர் மோடி ஆட்சி நடத்தினார். ஆனால் இந்தியா கூட்டணி அரசு, ஒவ்வொரு ஏழைகளையும் செல்வந்தர்களாக உயர்த்தும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!