India
4 நாட்களுக்குப் பிறகு வாக்கு சதவீதத்தை வெளியிட்டது ஏன்? : தேர்தல் ஆணையத்திற்கு டெரிக் ஓ பிரைன் கேள்வி!
2 ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் நிறைவடைந்து, 4 நாட்களுக்குப் பிறகு தேர்தல் வாக்கு சதவீதத்தை வெளியிட்டது ஏன்? என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு சந்தேகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதல் 2 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்று பல நாட்களாகியும் வாக்குப்பதிவு விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடாமல் இருந்தது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனங்களை தெரிவித்து இருந்தனர். பின்னர் எதிர்கட்சிகளின் விமர்சனத்தை தொடர்ந்து முதல் இரண்டு கட்டத் தேர்தலில் பதிவான இறுதி கட்ட வாக்குப்பதிவு விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அதில், முதற்கட்ட வாக்குப்பதிவில் 66.14%, 2ம் கட்டத்தில் 66.71% வாக்குகளும் பதிவாகியிருந்தது. தேர்தல் முடிந்ததம் வெயிட்ட வாக்குசதத்தை விட தற்போது அதிகமாக காணப்படுவதால், தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி., டெரிக் ஓ பிரைன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், ”2-ம் கட்ட மக்களவைத் தேர்தல் நிறைவடைந்து, 4 நாட்களுக்குப் பிறகு, தேர்தல் வாக்கு சதவீதத்தை வெளியிட்டது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். வாக்குசதவீதம் 5 புள்ளி 75% அதிகரித்து வெளியிட்டுள்ளதன் பின்னணி என்ன என்றும் தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார். இது இயல்பானதா? வினவியுள்ளார்.
Also Read
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!
-
”பாலம் சிறப்பானது ; பெயர் அதனினும் சிறப்பானது” : முரசொலி தலையங்கம் புகழாரம்!