India
பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் Fail : வெளிவந்த பாஜக ஆளும் ம.பி அரசுப் பள்ளியின் அவலம் !
ஆண்டுதோறும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜக ஆளும் மத்திய பிரதேசத்திலும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அண்மையில் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த முடிவில் சுமார் 3.5 லட்சம் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் 10-ம் வகுப்பு மாணவர்கள் 58.10% மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் 64.48% மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 10-ம் வகுப்பை சேர்ந்த 3,58,640 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ம.பியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் தேர்வெழுதிய 89 மாணவர்களில் 85 மாணவர்கள் Fail ஆகியுள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் பர்வானி பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 89 மாணவர்களில் 85 பேர் தேர்வெழுதியுள்ளனர். அந்த 85 பெரும் தேர்ச்சி பெறவில்லை என்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
அதோடு, அதே பகுதியில் உள்ள மற்றொரு பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 75 மாணவர்களில் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாகவும், மீதமுள்ள 70 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதனால் மாணவர்களின் அனைத்து பெற்றோர்களும் பள்ளியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்தே இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் கவனக்குறைவாக செயல்பட்டு மதிப்பெண்களின் தவறு செய்த ஆசிரியர்கள் மீதும் நடவ்டிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்கையில், அரசுப்பள்ளியில் ஆசிரியர் பற்றாற்குறை என்பதால் காமர்ஸ் பாடத்தை, கணித ஆசிரியர் நடத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் அங்கே மாணவர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,62,864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000! : நாளை (ஜன.8) தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“Very sorry உங்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!