India
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திர திட்டம் : ஊழலை அங்கீகரிக்கும் நிர்மலா சீதாராமன்!
2018ஆம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு தேர்தல் நன்கொடை பத்திர திட்டத்தை கொண்டு வந்தது. பல்வேறு நிறுவனங்களை விசாரணை அமைப்புகள் மூலம் அச்சுறுத்திய பாஜக, தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் ரூ.8 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை குவித்தது அம்பலமானது.
இதனிடையே, வெளிப்படைத்தன்மை இல்லாத இந்தத் திட்டம், கருப்பு பணத்தை அதிகரிக்கச் செய்யும் எனக் கூறி உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் பல்வேறு நிறுவனங்களை மிரட்டி பா.ஜ.க எப்படி எல்லாம் நிதி பெற்றது என்ற விவரங்களும் வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஒன்றிய பா.ஜ.க அரசின் மிகப்பெரிய ஊழல் தேர்தல் பத்திரம் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மேலும் PM Cares நிதி குறித்து வெளிப்படை தன்மையுடன் அறிவிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திர திட்டம் அமல்படுத்தப்படும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய நிர்மலா சீதாராமன், "உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரத்தை ரத்து செய்துள்ளது. அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேர்தல் பத்திர திட்டத்தை பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இத்திட்டம் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தப்படும். மேலும் கருப்புப் பணத்தை முழுமையாக ஒழிக்க இத்திட்டம் உருவாக்கப்படும்." என தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் பாஜக அரசு செயல்படும் என்பதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேட்டி உறுதிப்படுத்தி இருப்பதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !