India
”தேசத்தின் ஆன்மாவில் ஏற்பட்ட காயங்களுக்கு உங்கள் வாக்குகள்தான் மருந்து” : ராகுல் காந்தி!
18 ஆவது மக்களவை தேர்தல் திருவிழா இன்று தொடங்கியது. முதல் கட்டமாக 102 மக்களவை தொகுதிகளிலும் 92 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதேபோல் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது.
காலையிலேயே அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகிறார்கள். அதேபோல் பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மேலும் சினிமா பிரபலங்களும் தங்களது வாக்கினை வரிசையில் காத்திருந்து செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், 21மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியதை அடுத்து ஜனநாயகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் என சமூகவலைதளத்தில் காங்கிரஸ் முன்னணி நிர்வாகி ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
அதில், ”இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு. உங்கள் வாக்குகள் ஒவ்வொன்றும் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். ஒவ்வொரு வாக்கும் அடுத்த தலைமுறையையும் தீர்மானிக்கப் போகிறது என்பதை வாக்களர்கள் நினைவில் கொள்ளுங்கள். கடந்த 10 ஆண்டுகளில் தேசத்தின் ஆன்மாவில் ஏற்பட்ட காயங்களுக்கு உங்கள் வாக்குகள் மூலம் மருந்தளித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள். வெறுப்பைத் தோற்கடித்து ஒவ்வொரு மூலையிலும் அன்பின் கடையைத் திறப்போம்.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார் : சோகத்தில் திரையுலகம்!
-
த.வெ.க அரசை எதிர்க்கும் சி.பி.எம் : நாளை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு - காரணம் என்ன?
-
“முதல்வர் அறை டெண்டரில் முறைகேடு? மோசடித்தனத்தின் உச்சம்” : முரசொலி தலையங்கம் விளாசல்!
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!