India

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - ராகுல் காந்தி நட்பு! : சகோதரத்துவத்தின் வெளிப்பாடு!

பாசிசத்தை அடிப்படையாக வைத்து, மதவாத அரசியலை மேற்கொள்ளும் பா.ஜ.க, கடந்த 2 முறை ஆட்சியை பிடித்திருக்கிற நிலையில்,

சமூக நீதியின் குரலாக, உழைக்கும் மக்களின் உரிமை குரலாக, சிறுபான்மையினருக்கு உறுதியளிக்கும் குரலாக, மக்களாட்சியை நிறுவுகிற குரலாக இந்தியா கூட்டணியின் குரல் உருபெற்றுள்ளது.

அடக்குமுறையால் ஒரு கட்சி வளர்கிறது என்று தெரிந்தாலும், மதத்தை பரப்பினால் தன் கட்சியும் வளரும் என்று அறிந்தாலும், மதச்சார்பின்மையை தூக்கிப்பிடித்து, சமூக நீதியை ஒன்றியத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நிலைநாட்டுகிறார்கள் என்றால்,

அதற்கு, தெற்கில் திராவிட நாயகனாக விளங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அதற்கு முன்னோடியாக திகழ்வது தான் காரணம் என்பதும் தவிர்க்க முடியாத கூற்றாக திகழ்கிறது.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது அளவுகடந்த மதிப்பையும், அன்பையும் கடந்த காலம் தொட்டு பகிர்ந்து வருகிறார்.

அன்பின் வெளிக்காட்டுதலாக, அண்மையில் கூட 2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு, தமிழ்நாடு வருகை தந்த காங்கிரஸ் MP ராகுல் காந்தி, தாமாகவே கடைக்கு சென்று இனிப்பு வாங்கி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அளித்தார்.

இந்த நெகிழ்வான நிகழ்வை காணொளியாக பதிவு செய்து, தனது சமூக வலைதளப் பக்கத்திலும் பகிர்ந்தார் ராகுல் காந்தி.

அக்காணொளி சமூக வலைதளத்தில் வெளியான 20 மணிநேரத்திற்குள், சுமார் 52 இலட்சம் பார்வையாளர்களை கடந்து, பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

மேலும், இந்தியாவின் கண்ணாடியாக நான் தமிழ்நாட்டை பார்க்கிறேன் என்கிறார் ராகுல் காந்தி. தமிழ்நாட்டு மக்களை உண்மையான அன்பால் மட்டும் தான் வெல்ல முடியும் என்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

மக்கள் மீது இவர்கள் செலுத்தும் அன்பினால் மக்களுக்கும் இந்தியா கூட்டணி மீது நாளுக்கு நாள் அன்பும், ஆதரவும் கூடிக்கொண்டே செல்கிறது.

Also Read: பா.ஜ.க.வின் தவிர்க்க முடியாத தோல்வி : அதிகரிக்கும் இந்தியா கூட்டணியின் ஆதரவு!