India
”பொய்களை உதிர்ப்பதன் மூலம் வரலாறு மாறாது” : பா.ஜ.கவுக்கு ராகுல் காந்தி பதிலடி!
இந்தியாவில் மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்.19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் இந்த தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி என காங்கிரஸ் நிர்வாகி ராகுல் காந்தி எம்.பி தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ”2024 மக்களவை தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி.
ஒரு பக்கம் இந்தியாவை எப்போதும் ஒன்றிணைக்கும் சக்தியாக காங்கிரஸ் உள்ளது, மறுபுறம் மக்களை எப்போதும் பிரிக்க முயல்பவர்கள் உள்ளனர். நாட்டைப் பிளவுபடுத்த நினைத்த சக்திகளுடன் கைகோர்த்து அவர்களை வலுப்படுத்தியவர்கள், நாட்டின் ஒற்றுமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடியவர்கள் யார் என்பதற்கு வரலாறு சாட்சி.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது ஆங்கிலேயர்களுடன் நின்றது யார்? இந்தியாவின் சிறைகள் காங்கிரஸ் தலைவர்களால் நிரப்பப்பட்டபோது, நாட்டைப் பிளவுபடுத்திய சக்திகளுடன் மாநிலங்களில் ஆட்சியை நடத்துவது யார்?. அரசியல் தளங்களிலிருந்து பொய்களை உதிர்ப்பதன் மூலம் வரலாறு மாறாது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!