India
“இதுதான் பேசும் கலாச்சார பெருமையா?” - ஸ்பெயின் பெண் வன்கொடுமை விவகாரம் : அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம்!
இந்தியாவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா வரும் பெண்களுக்கு சிலர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வருகின்றனர். தற்போது ஜார்கண்டிலும் அதே போன்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஸ்பெயினின் பிரேசிலை சேர்ந்த தம்பதி இரு சக்கர வாகனத்தில் ஆசியா முழுவதும் சுற்றி பார்க்க எண்ணியுள்ளனர்.
அதன்படி பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்த இவர்கள், அண்மையில் இந்தியா வந்துள்ளனர். இந்த சூழலில் கடந்த மார்ச் 1-ம் தேதி இவர்கள் ஜார்க்கண்டின் தும்கா காட்டில் கூடாரம் அமைத்து தம்பதி தங்கியிருந்தனர். அப்போது இரவு நேரத்தில் அங்கே வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல், தம்பதியை தாக்கியுள்ளனர். மேலும் கணவரை அடித்து இழுத்து, மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளனர். அதோடு அவர்களிடம் இருந்து பணம் உள்ளிட்ட உபகரணங்களையும் திருடி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது சமூக வலைதள பக்கத்தில் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதையடுத்தே இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், பிரேசில் தூதகம் இந்த சம்பவத்தில் தலையிட்டதையடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், உடனடியாக குற்றம்சாட்டப்பட்ட 3 இளைஞர்களை கைது செய்தனர்.
தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் 4 பேரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தியா வரும் சுற்றுலா பெண் பயணிகள் மிகுந்த பயத்துடன் உள்ளனர். மேலும் இந்த செய்தி உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு பெரும் அவப்பெயரை பெற்றுத் தந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அமைச்சர் மனோ தங்கராஜ் இந்த விவாகரத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “66 நாடுகளை மகிழ்ச்சியுடன் கடந்த தம்பதி வட இந்தியாவில் 7 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது எழுப்பிய அழுகுரல் மோடியின் காதுகளில் கேட்கவில்லையா? இது தேசத்தின் அவமானம். இந்த காட்டுமிராண்டி செயல்தான் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசும் கலாச்சார பெருமையா?” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற சம்பவம் இது முதல் முறையல்ல. பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண்கள் இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொள்ளும்போது வட இந்தியாவில் பாலியல் ரீதியான தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!