India
ரப்பர் குண்டு தாக்குதல் - 3 விவசாயிகள் பார்வை இழப்பு : மோடி அரசின் கொடூர முகம்!
விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும், வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
இதற்காக, பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லிக்கு வாகனங்களில் பேரணியாகப் புறப்பட்டனர். விவசாயிகளின் பேரணி டெல்லி செல்வதைத் தடுக்க டெல்லி எல்லைப் பகுதிகளான சிங்கு, திக்ரி, காசிப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் பாதுகாப்புப் படையினர் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி எல்லைகளில் கன்டெய்னர்கள், போலீஸ் வாகனங்கள், ராட்சத கான்கிரீட் சுவர்கள் வைத்துத் தடுப்புகள் அமைக்கப்பட்டு சுற்றிலும் முள்வேலிகள் போடப்பட்டுள்ளன.
கடந்த மூன்று நாட்களாக விவசாயிகள் டெல்லி எல்லைப் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது மீது ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் ஒன்றிய அரசு மூன்று முறை விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதில் தோல்வியில் முடிந்ததை அடுத்து திட்டமிட்டப்பட்டி டெல்லி நோக்கிச் செல்லும் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஷம்பு எல்லையில் ஹரியானா போலிஸார் தொடர்ச்சியாக விவசாயிகள் மீது ரப்பர் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்தார்கள். இதில் பாட்டியாலா ராஜேந்திர மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் விவசாயிகளில் இருவர் கண்பார்வையை இழந்துள்ளனர்.
அதேபோன்று முகத்தில் தீவிர காயம் ஏற்பட்ட தேவேந்தர் சிங் சேக்பூரியா என்பவர் சண்டிகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கண்ணிலிருந்து ரப்பர் புல்லட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. அவருக்குப் பார்வை திரும்ப கிடைக்க வாய்ப்பு குறைவு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“பாஜகவிடம் அடிமையாக அதிமுக இருப்பதற்கான காரணம் இதுதான்...” - தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. பேச்சு!
-
பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைக்கும் ‘அன்புக்கரங்கள்’ திட்டம் - புதிய திட்டத்தின் சிறப்பு என்ன?
-
“இது என்ன, வாக்கரசியலுக்காக செய்வதா?” : ‘அன்புக்கரங்கள்’ திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் பதிலடி!
-
“IPL போல அதிமுகவில் APL போட்டி நடத்தலாம்” - அதிமுகவின் பல அணிகளை குறிப்பிட்டு துணை முதலமைச்சர் கிண்டல்!
-
“விஸ்வகுரு, விசுவாசம் இல்லாத குருவாகக் காட்டிக் கொண்டுவிட்டார்” - மோடியை விமர்சித்த முரசொலி தலையங்கம்!