India
தலித் மற்றும் பழங்குடியினர்களை தட்டிக்கழிக்கும் குஜராத் அரசு: இரண்டு ஆண்டுகளாக விசாரிக்கப்படாத வழக்குகள்!
“SC, ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி, தலித் மற்றும் பழங்குடியினர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பாஜக அதனை செய்ய தவறுகிறது,” - ஹிதேந்திர பித்ததியா.
குஜராத் மாநிலத்தில், சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இதன் கேள்வி நேரத்தில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் (ச.உ) ஜிக்னேஷ் மேவானி,“தலித் மற்றும் பழங்குடியினர்களுக்கு எதிராக நிகழும் குற்றங்கள்” குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சமூக நீதி அமைச்சகம், SC, ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குழு அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என தெரிவித்தது. மேலும், சில தரவுகளையும் வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸின் தலித் பிரிவுத் தலைவர், ஹிதேந்திர பித்ததியா, “இந்தியாவிலேயே குஜராத்தில் தான் SC,ST பிரிவினர்களுக்கு எதிராக அதிகப்படியான குற்றங்கள் நிகழ்கின்றன.
தேசிய குற்றப்பிரிவு பதிவகம் (NCRB)வெளியிட்ட அறிக்கையின் படி, குஜராத்தில் ஒவ்வொரு நாளும் SC,ST பிரிவினர்களுக்கு எதிராக சுமார் 4 குற்றங்கள் நிகழ்கின்றன. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக பா.ஜ.க தட்டிக்கழித்து வருகிறது ” என குற்றஞ்சாட்டினார்.
மேலும், “SC, ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி, முதல்வர் தலைமையில், தலைமை காவல் ஆணையர் உள்ளிட்டவர்கள் அமைந்த குழு, சிறுபான்மையினர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதிலும் மந்த நிலையே நீடித்து வருகிறது,” என்றார்.
ஒன்றிய உள்துறை அமைச்சகத்தில் தரவுகள் (DATA) படி, கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் தலித்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நிலையில், குற்ற விசாரணைகளில் காலம் தாழ்த்தி வரும் பா.ஜ.க, அநீதி இழைத்து வருகிறது என எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
Also Read
-
ஒரே ஆண்டில் 17,702 பேருக்கு அரசு வேலை : சாதனை படைத்த TNPSC!
-
”பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
-
GST வரி செலுத்துவோரின் சுமை எப்படி குறையும்? இதில் என்ன பெருமை இருக்கிறது?: மோடி அரசுக்கு முரசொலி கேள்வி!
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!