India
செல்போனை பிடுங்கிய கணவன்... ஆத்திரத்தில் கத்தரிக்கோலால் கண்ணில் குத்திய மனைவி - உ.பியில் அதிர்ச்சி !
உத்தர பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியை சேர்ந்தவர் அங்கித் - பிரியங்கா தம்பதி. இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான நிலையில், கணவர் மனைவிக்குள் ஏற்படும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் இருவரும் அடித்து கொள்வர் என்றும் கூறப்படுகிறது.
இந்த சூழலில் சம்பவத்தன்று மனைவி பிரியங்கா, தனது செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த கணவர் அங்கித், அவரிடம் செல்போனை கேட்டுள்ளார். அதற்கு அவர் கொடுக்க மாட்டேன் என்றதும், பாடல் கேட்கதான் கேட்பதாக கூறி மறுபடியும் கேட்டுள்ளார். ஆனால், தனது கணவர் தன்னை சந்தேகப்படுவதாக எண்ணிய மனைவி, செல்போனை கொடுக்க தொடர்ந்து மறுத்து வந்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது மனைவியிடம் இருந்து செல்போனை பிடுங்கியுள்ளார். இதனால் கடும் கோபம் கொண்ட மனைவி, அருகில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து, கணவரது கண்களில் குத்தியுள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த கணவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் விரைந்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து போலிஸுக்கு தகவல் கொடுக்கப்பட்ட கையோடு, அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே தற்போது கணவர் அங்கித்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மனைவி பிரியங்காவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!