இந்தியா

4 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளம் பெண் : போலிஸ் விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!

கர்நாடகாவில் 4 ஆண்களை ஏமாற்றி பெண் ஒருவர் திருமணம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளம் பெண் : போலிஸ் விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகா மாநிலம் தாவணகெரே பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சினேகா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. இவர் மாண்டியாவின் நரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்.

இதையடுத்து இருவரும் தங்களது செல்போன் எண்களை மாற்றிக் கொண்டு, தினமும் பேசி வந்துள்ளனர். பிறகு ஒரு கட்டத்தில் இவரும் தங்களது காதலை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இது குறித்து தத்தமது வீடுகளில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இரண்டு வீட்டார் சமதத்துடன் கடந்த ஆண்டு சினேகாவை பிரசாந்த் திருமணம் செய்துள்ளார்.

பின்னர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் கர்பமடைந்துள்ளதாகவும், தாய் வீட்டிற்குச் செல்வதாகக் கணவனிடம் கூறிவிட்டு சினேகா சென்றுள்ளார். பிறகு சில நாட்கள் கழித்து அவரது வீட்டிற்குத் தொடர்பு கொண்டபோது சினேகா அங்குச் செல்லவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.

4 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளம் பெண் : போலிஸ் விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!

இதனால் அதிர்ச்சியடைந்த பிரசாந்த், மனைவி காணாமல் போனதாக தாவணகெரே கே.டி.ஜே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் சில நாட்களுக்கு முன் திருமணக் கோலத்தில் மனைவி சினேகா மற்றொரு வாலிபரும் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் சினேகா குறித்து விசாரித்தபோதுதான் ஏற்கனவே இவருக்கு இரண்டு திருமணம் நடந்தது என்றும் மூன்றாவதாக பிரசாந்த்தைத் திருமணம் செய்தது தெரியவந்தது.

தற்போது நான்காவதாக மற்றொரு வாலிபரைத் திருமணம் செய்துள்ளார். முதல் கணவரைப் பிரிந்த சினேகா, தனக்குத் திருமணம் ஆகவில்லை என்று கூறி அடுத்தடுத்து மூன்று பேரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளது போலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவாக இருக்கும் சினேகாவை போலிஸார் தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories