India
’வரதட்சணை கொடுக்காம உனக்கு எதற்கு மூக்கு’ : மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்!
உத்தர பிரதேச மாநிலம் மகேஷ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆஜ்மி. இவருக்குக் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நஜிம் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு 5 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இதற்கிடையில் திருமணம் நடந்த நாளிலிருந்து கேட்ட வரதட்சணையை கொடுக்கவில்லை என மனைவியைக் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் அடித்து கொடுமைப் படுத்தியுள்ளனர்.
மேலும் வீட்டை விட்டும் துரத்தியுள்ளனர். அப்போது எல்லாம் பஞ்சாயத்து செய்து அவரை மீண்டும் அனுப்பிவைத்துள்ளனர். இருந்தும் வரதட்சணை பிரச்சனை தொடர்ந்து கொண்டேதான் இருந்துள்ளது.
இந்நிலையில் டிசம்பர் 15ம் தேதி வரதட்சணை கேட்டுமீண்டும் மனைவியிடம் நஜிம் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரத்தில் மனைவியின் மூக்கை கடித்துத் துப்பியுள்ளார். அதோடு அவரது மாமியார், மாமனார் உள்ளிட்டவர்களும் ஆஜ்மியை அடித்துள்ளனர்.
இதையடுத்து ஆஜ்மி தனது கணவர் நஜிம், மாமனார் சபீர் உள்ளிட்ட உறவினர்கள் 6 பேர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!