India
திருமணத்துக்கு தடையாக இருந்ததாக 4 வயது மகள், தாய் கோடாரியால் தாக்கி கொலை : கொடூர தந்தை தற்கொலை !
கேரளாவின் ஆலப்புழா மாவட்டம், ஆனக்கூடு என்ற பகுதியை சேர்த்தவர் ஸ்ரீமகேஷ் (வயது 38). இவர் தனது மனைவி வித்யா மற்றும் 4 வயது குழந்தை நக்ஷத்ராவோடு துபாயில் வசித்து வந்தனர். இதனிடையே கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் வித்யா தற்கொலை செய்துகொண்டார்.
இதனால் ஸ்ரீமகேஷ்க்கு வேறு திருமணம் செய்துவைக்க அவரது குடும்பத்தினர் முயன்ற நிலையில், அவருக்கு ஒரு குழந்தை இருப்பதால் திருமணம் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனிடையே ஸ்ரீமகேஷின் தந்தை காலமான நிலையில், அவர் கேரளாவுக்கு வந்துள்ளார்.
இதனிடையே தனது குழந்தையால்தான் தனக்கு திருமணம் ஆகவில்லை என்ற விரக்தியில் கடந்த ஜூன் 7-ம் தேதி தனது குழந்தை நக்ஷத்ராவின் தலையில் கோடாரியால் அடித்து ஸ்ரீமகேஷ் கொலை செய்துள்ளார். மேலும், இதனை பார்த்த தனது தாயையும் கொலை செய்து அங்கிருந்து தப்பியோடிய போது, அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து காவல்நிலையத்தில் பிடித்து ஒப்படைந்துள்ளனர்.
தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அங்கு கையால் கிழித்து ஸ்ரீமகேஷ் தற்கொலைக்கு முயன்றுள்ளார். எனினும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. பின்னர் அவரை திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைப்பதற்காக போலீஸார் கொல்லம் பயணிகள் ரயிலில் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது திடீரென போலீசாரை தள்ளிவிட்டு ஓடும் ரயிலில் இருந்து ஸ்ரீமகேஷ் கீழே குதித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை போலிஸார் மருத்துவமனையில் அனுமதியுள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!