India
8 வயது சிறுமி வன்கொடுமை செய்யபட்டு கொலை.. 15 வயது சிறுவன் கைது- சடலத்தை மறைக்க உதவிய சிறுவனின் பெற்றோர்!
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகேயுள்ள வசா என்ற பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவரின் வீட்டின் அருகே 15 வயது சிறுவன் ஒருவர் இருந்துள்ளார். 3 நாட்களுக்கு முன்னர் சிறுமி தனியாக இருந்தபோது அவரை அந்த சிறுவன் தனது வீட்டுக்குள் இழுத்து சென்றுள்ளார்.
பின்னர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது அந்த சிறுமி கத்தியால் கழுத்தை நெரித்து அந்த சிறுமியை கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்த சாக்கு மூட்டையில் சிறுமியின் உடலை கட்டிவைத்து வழக்கம் போல இருந்துள்ளார்.
இதனிடையே சிறுமியை காணாமல் அவரது பெற்றோர் தேடியுள்ளனர். மேலும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணையில் மூன்று நாட்களுக்கு பிறகு 15 வயது சிறுவன் வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்துள்ளது.
அப்போது போலிஸார் வீட்டுக்குள் தேடியபோது அங்கிருந்த சடலத்தில் சிறுமியின் உடல் கிடந்துள்ளது. தொடர்ந்து அந்த வீட்டில் இருந்தவரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியபோது, அந்த நபரின் 15 வயது மகன் இந்த கொலையை செய்ததும், பின்னர் அதனை அறிந்து தந்தையே அந்த சடலத்தை மறைத்து வைத்ததும் தெரியவந்தது.
பின்னர், உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்திருந்த சிறுவனையும் போலிஸார் கைது செய்தனர். மேலும், சிறுமியின் சடலத்தை மறைக்க உதவிய சிறுவனின் தாயையும் போலிஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
-
SIR - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி : தொல்.திருமாவளவன் MP கண்டனம்!
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!