India
முற்றிய வாக்குவாதம்: மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்ட மனைவி.. இரத்த வெள்ளத்தில் பலியான சோகம் - கணவர் கைது!
உத்தர பிரதேச மாநிலம் அலிகார் பகுதியை அடுத்துள்ளது சுரேந்திர நகர். இங்கு கௌரவ் கௌதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கௌரி என்ற மனைவியும் உள்ள நிலையில், கௌதம் குடி பழக்கத்துக்கு அடிமையாக இருந்துள்ளார். இந்த சூழலில் இவரது குடி பழக்கத்தால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
தொடர்ந்து நடைபெறும் வாங்குவதால், சில நேரங்களில் கை களைப்பாகவும் மாறும். மேலும் குடிப்பதற்காக மனைவி கௌரியிடம் பணத்தை அடிக்கடி அடித்து உதைத்து பெற்று வந்துள்ளார் கணவர் கௌதம். அந்த வகையில் சம்பவத்தன்றும், கணவன், தனது மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். இதில் தர மறுத்துள்ளார் மனைவி.
அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மொட்டை மாடியில் வைத்து இருவரும் கத்தி கடுமையாக சண்டை போட்டுள்ளனர். மேலும் கௌதம், தனது மனைவி என்றும் பாராமல் கழுத்தை இறுக்கமாக நெரித்துள்ளார். அப்படி இருந்தும் கூட குடிப்பதற்கு பணம் தர முடியாது என்று கௌரி மறுத்துள்ளார். இஏற்பட்டுள்ளது.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த கௌதம், தனது மனைவி கௌரியை மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் கௌரி துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து திகைத்து நின்ற கௌதம் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், அந்த குழந்தைகளை போலீசார் உறவினர் வீட்டில் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து தப்பியோடிய கணவர் கௌதம் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இலக்கிய மாமணி விருதுகள் 2024 : 3 தமிழறிஞர்களுக்கு வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.20.89 கோடியில் 4 முடிவுற்ற பணிகள்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இவைதான் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் மோடி செய்யும் தாக்குதல்கள்..” - பட்டியலிட்டு முரசொலி காட்டம்!
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!