India
ஊதியம் கேட்ட ஊழியர் - தான் அணிந்த செருப்பை வாயால் எடுக்க சொன்ன முதலாளி : குஜராத்தில் கொடூரம்!
குஜராத் மாநிலம் மோர்பியில் டைல்ஸ் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்குப் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நிலேஷ் தல்சானியா என்ற இளைஞர் அக்டோபர் 2 ஆம் தேதி வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
பின்னர் திடீரென அக்டோபர் 18 ஆம் தேதி எவ்வித காரணமும் சொல்லாமல் அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இருப்பினும் தான் வேலை செய்த 16 நாட்களுக்கு ஊதியம் கொடுப்பார்கள் என இளைஞர் நினைத்துள்ளார்.
இது குறித்து நிறுவனத்தின் தொலைப்பேசி எண்ணிற்கு அழைத்து தனது ஊதியம் குறித்துக் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் உரிய பதில் கொடுக்கவில்லை. இதனால் நிறுவனத்திற்குச் சென்று கேட்டுள்ளார். அப்போது நிறுவனத்தின் உரிமையாளர் விபூதி படேல் ராணிபால் என்பவர் ஊதியம் தரமுடியாது என நிலேஷ் தல்சானியாவை மிரட்டியுள்ளார்.
மேலும் அவரை நிறுவனத்தின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று அடித்து, தான் அணிந்திருந்த செருப்பை வாயால் எடுக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். அதோடு நிறுவனத்தில் பணம் திருடிவிட்டதாகச் சொல்லி காவல்நிலையத்தில் புகார் கொடுத்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். நிலேஷ் தல்சானியா உடன் வந்த சகோதரர்களையும் அடித்துள்ளனர்.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட நிலேஷ் தல்சானியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலிஸார் நிறுவனத்தின் உரிமையாளர் விபூதி படேல் ராணிபால் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. இந்த கொடூர சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“கல்வி உதவித்தொகை வழங்க இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?” : த.வெ.க அரசுக்கு கனிமொழி எம்.பி கேள்வி!
-
“உரிய முறையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” : அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கடிதம்!
-
“நிர்மல்குமாருக்கு அறிவு இருக்குமானால் இஸ்மாயில் ஆணையத்தின் அறிக்கையை எடுத்துப் பார்க்கலாம்” : முரசொலி!
-
TARGET செய்யும் தவெக அரசு? : “Mental Torture பண்ணாதீங்க..” - கண்ணீருடன் VIDEO வெளியிட்ட மாணவர் பாரதிதாசன்
-
“தி.மு.க படிக்க வைக்கும்” : மாணவர் பாரதிதாசனுக்காக குரல் கொடுத்த மு.க.ஸ்டாலின்!