India
சாலையில் கிடந்த சூட்கேஸில் பெண்ணின் சடலம் : மும்பையை அதிரவைத்த சம்பவம் - என்ன நடந்தது?
மும்பை காந்தி நகர் சி.எஸ்.டி சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இங்குப் பெரிய சூட்கேஸ் ஒன்று சந்தேகத்திற்கு இடமாக இருந்தது. இது குறித்து பொதுமக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து போலிஸார் அங்கு வந்து சூட்கேஸை திறந்து பார்த்தபோது அதில் ஒரு பெண்ணின் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சடலத்தை மீட்ட போலிஸார் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.
இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணுக்கு 25 முதல் 35 வயது இருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் அவர் யார் என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இந்த சூட்கேஸ் எப்படி இங்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சாலையிலிருந்த சூட்கேஸில் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!
-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கும் பழனிசாமி: துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!
-
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : 13 பிரிவில் சுற்றுலா விருதுகள்!
-
“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!