India
குஜராத் : பாரம்பரிய நடனத்தின்போது மாரடைப்பு: அடுத்தடுத்து 10 பேர் பலி- நவராத்திரி கொண்டாட்டத்தில் சோகம் !
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான நவராத்திரி தற்போது அங்கு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மொத்தம் 9 நாட்கள் நடைபெறும் இந்த கொண்டாட்டத்தில் இரவில் தினந்தோறும் 'கர்பா' நடனம் ஆடி இந்த பண்டிகை கொண்டாடப்படும்.
பாரம்பரிய நடனமாக இந்த 'கர்பா' நடனம் இரவு முழுவதும் ஆடப்படும். இந்த நடனத்தின் போது பாரம்பரிய உடை அணிந்த ஆண்கள், பெண்கள் இசைக்கு ஏற்க நடனமாடுவர். வடமாநிலத்தின் பல்வேறு பகுதியில் இந்த நடனம் ஆடப்பட்டாலும் குஜராத்தில் பல ஆண்டுகளான இந்த நடனம் புகழ் பெற்று விளங்குகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் குஜராத்தில் நவராத்திரி நிகழ்வு நடைபெற்று வரும் நிலையில், அங்கு 'கர்பா' நடனமாடிய 10-க்கும் அதிகமானோர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பல்வேறு பகுதிகளில் இந்த மரணம் நடைபெற்றுள்ளது.
இதில் இறந்தவர்கள் பலர் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. நவராத்திரி தொடங்கிய முதல் 6 நாட்களில் கர்பா நடனமாடியபோது 609 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக 'கர்பா' நடனங்கள் நடைபெறும் இடங்களில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆம்புலன்ஸ்களை நிறுத்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், மருத்துவ உபகரணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Also Read
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!